Saturday, December 6, 2025

எடிட் செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ‘அஞ்சான்’ திரைப்படம்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இப்படத்தில் சூர்யா, வித்யூத் ஜமால், சமந்தா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் சமூக வலைதளங்களின் விமர்சனங்களால் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது.

இந்நிலையில், இந்தப் படத்தை மறு எடிட் செய்து கூடுதல் சுவாரசியமாக உருவாக்கி உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News