துணிவு படம் பார்க்கப் போன பெண் அமைச்சர்! அஜித் Fanஆ இருப்பாங்களோ?

31
Advertisement

‘செம்பருத்தி’ படத்திற்காக தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை ரோஜா.

அது மட்டுமில்லாமல் பல படங்களில் நடித்து, ரசிகர்களை பெற்ற அவர் 2014ஆம் ஆண்டில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக இருக்கும் ரோஜா, அண்மையில் ரிலீசான ‘துணிவு’ படத்தை காண தியேட்டருக்கு சென்றது கவனம் ஈர்த்துள்ளது.

Advertisement

நகரியில் உள்ள SJ சினிமாஸ் திரையரங்கில் திடீரென பரபரப்பான சூழல் நிலவவே யாரோ பிரபலம் வந்துள்ளதாக அங்கு வந்தவர்கள் உணர்ந்து கொண்டனர். அதன்பிறகு, ரோஜா அங்கு வந்துள்ளது தெரிய வரவே பலரும் அவருடன் selfie எடுத்துக்கொண்டனர்.

வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி போன்ற தெலுங்கு படங்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் நிலையில், ரோஜா துணிவு படம் பார்த்ததால் அவர் அஜித் ரசிகராக இருப்பாரோ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.