ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டார். இந்நிலையில் கார் பந்தயத்தில் அஜித் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே 240 கி.மீ. வேகத்தில் காரை இயக்கி இருந்த நடிகர் அஜித்குமார் தற்போது மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காரை அதிவேகமாக இயக்கி தன் சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.