இந்தியாவுக்கு கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா கூறி இருக்கிறது.
எஸ் 400 என்பது ரஷ்யா உருவாக்கிய வான் பாதுகாப்பு கவச அமைப்பு ஆகும். இது தரையிலிருந்து வான்வெளி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய திறன் கொண்டது.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக பதிலடி கொடுத்தன. ட்ரோன் தாக்குதல்களை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
ரஷிய ராணுவக் கூட்டமைப்பின் தலைவர் திமிட்ரி ஷுகயேவ் கூறுகையில், “ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அதனைக் கூடுதலாக, வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.