Monday, February 10, 2025

பர்ஃபியூம், டியோடரண்ட் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாகவே பர்ஃபியூம், டியோடரண்ட் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. பர்ஃபியூம் நல்ல வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் டியோடரண்ட் வாசனையாகவும் இருக்கும், வியர்வையையும் கட்டுப்படுத்தும். இதை எப்படி பயன்படுத்தினால் உங்களுக்கு முழு பயன் கிடைக்கும், நீண்ட நேரம் லாங் லாஸ்டிங்காக இருக்கும் என்பதை இதில் பார்ப்போம்.

பர்ஃபியூம், டியோடரண்ட் இரண்டையும் ஒரே மாதிரி தான் பயன்படுத்துகிறோம். விளம்பரங்களைப் பார்த்து ஆடை முழுவதும் ஸ்பிரே செய்கிறோம். ஆனால் டியோடரண்டை நேரடியாக நம்முடைய சருமத்தில் தான் ஸ்பிரே செய்ய வேண்டும்.

டியோடரண்ட் நம்முடைய வியிர்வையைக் கட்டுப்படுத்தி, வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். எனவே உங்களுக்கு எங்கு அதிகமாக வியர்க்கிறதோ (அக்குள், கை மடிப்பு மற்றும் கழுத்துப் பகுதி) அந்த பகுதிகளில் மட்டும் ஸ்பிரே செய்யுங்கள்.

விளம்பரங்களைப் பார்த்து, டியோடரண்ட் ஸ்பிரேவை பலரும் தாராளமாக ஸ்பிரே செய்வார்கள். நிறைய ஸ்பிரே செய்தால் தான் நீண்ட நேரம் இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது மிக மிகத் தவறு. மிகக் குறைவான அளவு (2-3) ஸ்பிரே செய்ய வேண்டும். ஸ்கின்னு அருகில் இல்லாமல் ஒரு அடி தள்ளி வைத்து ஸ்பிரே செய்ய வேண்டும்.

Latest news