Thursday, April 24, 2025

ஐ.பி.எல் போட்டியில் முன்னணி வீரர் விலகல் : ஐதராபாத் அணிக்கு பலத்த பின்னடைவு

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடிக்கு பெயர் போன ஐதராபாத் அணி இம்முறை பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த ரவிச்சந்திரன் ஸ்மரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Latest news