மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை, ஈசிஆரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை நடிகை சினேகா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கம் சார்பில், சென்னை, ஈசிஆர் கானத்தூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை நடிகை சினேகா மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த மாரத்தானில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.