Friday, February 14, 2025

பணி நேரத்தில் தூங்கிய காவல் நாய் மீது நடவடிக்கை

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ் நாய் காவல்துறையின் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறது.

பிறந்து 4 மாதத்தில் போலீஸ் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நாய்க்குட்டிக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, பின்னர் காவல்துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் பணியின் போது தூங்கியதற்காக இந்த நாய்க்கு வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோடு, இதற்கு அபராதமாக நாய்க்கு வழங்கப்படும் கூடுதல் தின்பண்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.

Latest news