மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை, நபர் ஒருவர் அரசுப் பேருந்துக்குள் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பினாா். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தத்தாத்ரேய ராமதாஸ் கடே என்பதும் அவா் மீது ஏற்கெனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதற்கிடையே, குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தத்தாத்ரேய காடே புனேவின் ஷிரூரில் வைத்து கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.