பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்த வெயிலானது சாலையில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாரை படாதபாடு படுத்திவிடும்.
இதனை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அருகே புதிதாக உதயமான ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை கமிஷனர் சங்கர் வழங்கி அசத்தியுள்ளார். இது போக்குவரத்து போலீசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.