அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தா நேற்று பாஜகவில் இணைந்தார். இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ராகவ் சத்தாவின் இந்த செயலை தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் அவர் 10 லட்சம் ‘ஃபாலோவர்களை’ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் இழந்துள்ளார்.
ராகவ் சத்தா ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பிக்களின் துணை தலைவராக இருந்தார். ஆனால் சமீபத்தில் ஆம்ஆத்மி கட்சி அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியது. அதுமட்டுமின்றி ராகவ் சத்தாவிற்கு பேச வாய்ப்பு வழங்க கூடாது என்று ராஜ்யசபா தலைவருக்கு கடிதம் எழுதியது. இதனாால் அதிருப்தியடைந்த ராகவ் சத்தா பாஜகவில் இணைந்தார் .அவருடன் ஆம்ஆத்மியின் சந்தீப் பதாக், அசோக் மிட்டல் என்ற 2 எம்பிக்களும் பாஜகவில் சேர்ந்துள்ளனர். இன்னும் கூட ஹர்பஜன் சிங் உள்பட மேலும் சில ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும், இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர் அதிகமாக பின்தொடர முக்கிய காரணம் ராகவ் சத்தாவின் தனித்துவம் தான் என்றும் சொல்லலாம் .இந்நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைந்தததால் ராகவ் சத்தாவை சமூக வலைதளங்களில் பின்தொடர்வோர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றி வந்தவர்களில் 1 மில்லியன் பேர் வெளியேறி உள்ளனர்.
அதன்படி நேற்று காலையில் ராகவ் சத்தாவின் இன்ஸ்டாகிராமில் மொத்த followers 14.6 மில்லியனாக இருந்தது. இன்று மதியம் 1 மணியளவில் அவரது followers எண்ணிக்கை 13.5 மில்லியனாக உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
