மாறப்போகும் ஆதார் கார்டு.. இனி இது மட்டும்தான் இருக்குமா?

ஆதார் என்பது தற்போது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக உள்ளது. சிம்கார்டு முதல் நிதி சார்ந்த சேவைகள், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை பெறுவதற்கு பிரதான ஆவணமாக கேட்கப்படுகிறது.

ஆதார் அடையாள ஆவணத்தில் தற்போது 12 இலக்க எண்கள், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த கார்டை வைத்து பல்வேறு மோசடிகளும் நடைபெறுகின்றன. தனியார் அமைப்புகள், நிறுவனங்களிடம் கூட ஒருவரின் ஆதார் விவரங்கள் எளிதாக கிடைக்கின்றன. இதனால், ஆதாரின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே ஆதாரின் தனியுரிமையை உறுதி செய்யும் விதமாக ஆதார் கார்டில் மேஜர் மாற்றங்களை கொண்டு வர ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டிசம்பருக்குள் ஆதார் கார்டு மொத்தமாக மாறப்போகும் என்று சொல்லப்படுவதால் . என்னதான் அப்படி மாறும் என்பது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.

புதிய ஆதார் அட்டையில் கீழ்க்கண்ட விவரங்கள் மட்டுமே தெரியும்

புகைப்படம்
QR

பழைய ஆதார் அட்டையில் இருந்த கீழ்க்கண்ட விவரங்கள் இனி வெளிப்படையாக இருக்காது

பெயர்
ஆதார் எண்
முகவரி
பிறந்த தேதி
பாலினம்

Related News

Latest News