Friday, January 16, 2026

விமானம் புறப்படும் நேரத்தில் இளைஞர் செய்த செயலால் பரபரப்பு

சென்னையில் இருந்து துர்காப்பூருக்கு இன்று காலை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 164 பயணிகள் இருந்தனர். அப்போது 27 வயதான இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றிருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தான் அவசர கால கதவை திறக்கும் பட்டனை தெரியாமல் அழுத்தியதாக இளைஞர் தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞரை போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News