நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இடையேயான காதல் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இருவரும் இணைந்து நடித்த ‘பைசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் நெருக்கமாக பழகியதாகவும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டதால், இவர்களது உறவு குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இருவரும் தங்களது உறவு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காரணமாக அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு அமைந்துள்ளது.
அதில், இனி மற்றவர்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை, தன்னிச்சையாக பதிவிடுவதில் மகிழ்ச்சி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருதி பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் துருவ் விக்ரமை அன்ஃபாலோ செய்திருப்பதாகவும், இதுவே பிரிவு குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை மட்டுமே.
துருவ் விக்ரம் அல்லது அனுபமா பரமேஸ்வரன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. எனவே, இந்த பிரிவு தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.
