Friday, January 24, 2025

காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்னை விட்டு விடுங்கள் – கெஞ்சும் விஏஓ

திருப்பத்தூரில் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக, விஏஓ ஒருவர் ஆசிரியர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது

திருப்பத்தூர் மாவட்டம் செரக்காயல் நத்தம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்து தரக்கோரி அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவாஜி கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தெரிகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லஞ்சம் கொடுக்கப்பட்தாக கூறப்படும் நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம், பணி மாறுதலில் குரிசிலாப்பட்டு பகுதிக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் தரப்பினர், நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என கேட்டுள்ளார்.

அப்பொழுது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று விஏஓ கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest news