பெற்றோரின் மூடநம்பிக்கையால் பறிபோனது குழந்தைகளின் உயிர்!

391
Advertisement

பெற்றோர் மூட நம்பிக்கையால் செய்த செயல்,இரண்டு குழந்தைகளின் உயிரைப் பழிவாங்கி உள்ளது.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நள்ளிரவில் இரண்டு குழந்தைகளை பாம்பு கடித்துள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தத்தைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த பெற்றோர் அங்கு ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு பதறினர். பாம்பு கடித்துவிட்டதை உணர்ந்த அவர்கள் உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல்  ஒரு சாமியாரிடம் சென்றுள்ளனர். அந்த சாமியார் பாம்பு கடித்த 2 சிறுமிகளையும் துடைப்பத்தால் தலையில் ஓதியும், சடங்குகளை செய்தும் விநோதமான சிகிச்சையளித்துள்ளார். ஆனால், அது பலனளிக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர்  சிறுமிகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அந்தோ பரிதாபம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட வழியிலேயே 2 சிறுமிகள் வரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

பெற்றோரின் இந்த அறிவற்ற செயலால் இரண்டு குழந்தைகளின் உயிரும் பரிதாபமாக பறிபோது  அனைத்துப் பெற்றோர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.