திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 160 ஆண்டுகள் பழமையான செயின்ட் ஜோசப் கல்லூரி செயல்பட்டு வருகிறது . இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மாணவர் குழுக்களிடையே தகராறு ஏற்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, கல்லூரி வாசலில் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளால் தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.