சிறுவனுக்காகப் பள்ளிக்குச் செல்லும் ரோபோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் வாழ்ந்துவரும் 7 வயது சிறுவன் ஜோஸ்வா பெர்லின் நகரிலுள்ள பள்ளியில் பயின்றுவருகிறான். தற்போது பள்ளிக்குச் செல்லமுடியாத அளவுக்கு சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஸ்வா கழுத்தில் டியூப் அணிந்துள்ளான், அதன்காரணமாக, சிறுவனுக்குப் பதிலாக அவதார் என்னும் ரோபோ வகுப்பறைக்குச் செல்கிறது. அங்கு சக மாணவர்களுடன் ஜோஸ்வாவின் இருக்கையில் அமர்ந்து ஆசிரியர் போதிப்பதைக் கவனிக்கிறது.
மற்ற மாணவர்கள் அவதாருடன் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள். பதிலுக்கு அவதாரும் சக மாணவர்களோடு உரையாடுகிறது,சிரிக்கிறது.
வகுப்பறை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவதார் கிரகித்துள்ள பாடங்களை ஜோஸ்வாவிடம் பகிர்ந்துகொள்கிறது.
அவதாரின் வருகையால் ஜோஸ்வா மட்டுமன்றி, மாணவர் உலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.