Saturday, December 14, 2024

ஸ்கேட்டிங் செய்துகொண்டே ஃபுட்பால் விளையாடிய வீரர்

ஸ்கேட்டிங் செய்துகொண்டே கால்பந்து விளையாடிய
வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் மிகவும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில்
கால்பந்து முக்கியமான விளையாட்டாகும். இது மணல் கடற்கரைகள்
முதல் பனிமலைகள் வரை எல்லா இடங்களிலும் விளையாடப்படுகிறது.

இப்போது நம்ப முடியாத ஒரு வீடியோவில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த
ஆன்ட்ரி ராக்கெட்லி என்ற இளைஞர் பனிச்சறுக்கு விளையாட்டின்போது
கால்பந்து விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ராக்கெட்லி தனது பனிச்சறுக்கு சாகஸத்தின்போது பனிமூடிய
சரிவுகளில் சறுக்கும்போது பந்தை ஒரு காலில் இருந்து மற்றொரு
காலுக்கு உதைப்பதைக் காணலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,
பந்து ஒருமுறைகூட தரையைத் தொடவில்லை.

அனைத்துக் கால்பந்து வீரர்களையும் பொறாமை கொள்ள வைத்துள்ளது
ராக்கெட்லியின் அசாத்தியமான சாகஸம்.

Latest news
Related news