பேரணாம்பட்டு அருகே, வெளிமாநில மதுபாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியில், வெளிமாநில மதுபாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டில் இரண்டு சாக்குப்பையில் கர்நாடக மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 385 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், ராஜ்கமல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.