ஜப்பானில் என்னை திருமணம் செய்துகொள் என்ற எழுத்து வடிவில் 7 ஆயிரத்து 163 கிலோ மீட்டர் பயணித்து தனது காதலை தெரிவித்த நபரின் செயல் கவனம் பெற்றுள்ளது
ஜப்பானை சேர்ந்த யாசுஷி தகாஹாஷி என்ற நபர் தனது காதலியை விட்டு 6 மாதங்கள் பிரிந்து சென்றார். மேலும் தனது காதலிக்கு SURPRISE கொடுக்கும் வண்ணம், ஜப்பான் முழுவதும் “என்னை திருமணம் செய்து கொள் ” என்ற எழுத்து வடிவில் 7 ஆயிரத்து 163 கிலோ மீட்டர் பயணித்தார்.
GPS கருவி பொறுத்திய நிலையில் பயணித்த அவர், கார், படகு, மற்றும் மிதிவண்டிகளை பயன்படுத்தி தனது திட்டமிட்ட சுற்றுப்பயணத்தை முடித்தார். பின்னர் தான் கொண்டு சென்ற GPS கருவியின் வழித்தடத்தை படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்தபோது, அதனை கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மேலும் யாசுஷியின் இப்பயணம் உலகின் மிகப்பெரிய GPS வரைபடமாக கின்னஸ் சாதனை படைத்தது.