Friday, February 13, 2026

ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐஆர்சிடிசி கொண்டு வந்த முக்கிய மாற்றம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், பயணிகள் தங்களின் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் எடுக்க ஆதார் எண் அவசியம் என்று ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் இந்த மாதம் 4ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நேர வரம்பு மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

12ஆம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இருப்பினும், ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News