Thursday, February 19, 2026

கர்நாடகாவில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து., 17 பயணிகள் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோகர்ணாவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சொகுசு பேருந்து, அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் வந்த ஒரு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரை தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதி விபத்தில், பேருந்தும் லாரியும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் பேருந்துக்குள் இருந்த சில பயணிகள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த சிலர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News

Latest News