Friday, December 5, 2025

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குமரிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடையும். அதேசமயம் அந்தமான் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு 6 மணிநேரத்தில் மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ.25) முதல் நவ.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில் நவ.25-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நவ.26-இல் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News