திருச்சிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்? முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளான்.. முழுவிவரம் இதோ

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாநாட்டைத் திருச்சியில் நடத்தவும், அதில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவும் ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஐந்து தொகுதி இடைத்தேர்தல்களை மையப்படுத்தி இந்த மாநாடு திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் மாநாடு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் வரலாற்றில் திருச்சி முக்கிய இடம் பெற்றுள்ளது. 1956ஆம் ஆண்டு திமுக மாநாட்டில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

பின்னர், திருச்சி பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் மாநாடுகளுக்கும் களமாக அமைந்தது. முதல்வர் விஜய் ஏற்கெனவே விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் மாநாடுகளை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், திருச்சியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் மாநாடு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க முதல்வர் விஜய் ஆலோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், மாநாட்டில் விஜய் என்ன அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News