உத்தரபிரதேச மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அங்கு வந்த பக்தர் ஒருவர் தனது விலை உயர்ந்த மொபைல் எடுத்து அதுவும் பல பாவங்களைச் செய்துள்ளதாகவும், அதற்கு சுத்திகரிப்பு தேவை என கூறி அந்த மொபைலை தண்ணீரில் மூன்று முறை மூழ்கவிட்டு எடுத்தார்.
இதனால், அவரைச் சுற்றியிருந்த மக்கள் குளிப்பதை நிறுத்திவிட்டு அந்த நபரை பார்க்க தொடங்கினர். மேலும், அங்கு வருபவர்கள் அனைவரும் தங்கள் தொலைபேசிகளை இப்படி தண்ணீரில் மூழ்கடித்தால், தொலைபேசி மூலம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்று அந்த நபர் கூறுகிறார்.