படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழந்த பிரபல இளம் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்….

277
Advertisement

29 வயதான பிரபல கொரிய நடிகை பார்க் சூ ரியன் படிக்கட்டில் இருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்ஹிட் கொரிய தொலைக்காட்சித் தொடர் ‘Snowdrop’இல் நடித்து பலருக்கும் பரிச்சயமான பார்க் சூ, எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து விழுந்து சுயநினைவை இழந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், மருத்துவர்கள் அவர் மூளைச்சாவை அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரை கௌரவிக்கும் வகையில் அவரது உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். பார்க் சூ ரியனின் உடலுக்கு இறுதி சடங்குகள் வரும் திங்கள்கிழமை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய நாடகங்களை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.