54 வயது பெண் மீது, வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

704

குஜராத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது, வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்தின் ஆனந்த் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54 வயது பெண் மீது, வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியது. இதில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தே பாரத் ரயில் காந்திநகரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது முதல், தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவதை, விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.