விஜய்,ஸ்டாலின்,ரஜினி ஒரே ஃப்ரேமில்…ஆனால் சங்கீதா அருகில் இருந்த பெண் யாரென்று பார்த்தீர்களா?

அனிருத் காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.இந்த விழாவில் சினிமா,அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தோனி முதல் அஜித் வரை பல பிரபலங்கள் பங்கேற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் முதல்வர் விஜய் தனியாகக் கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி சங்கீதாவும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சங்கீதாவின் அருகில் நின்றிருந்த ஒரு பெண் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது. சிலர் அவர் நடிகையா என்றும், பார்ப்பதற்கு நடிகை நதியாவைப் போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில்,அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் மூக செல்வியின் வாரிசு தான் அந்த பெண். அவருடைய பெயர் எழிலரசி. 20 வருஷங்களுக்கு மேலாக டாக்டராக இருக்கும் அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.அந்த வகையில், சங்கீதாவுடனும் அவருக்கு நெருக்கமான நட்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விழாவில் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மூன்று முக்கியப் பிரபலங்களும் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்தது பேசப்பட்டாலும், சங்கீதாவின் அருகில் இருந்த பெண் யார் என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

Latest News