அது எப்படி வாத்தியாரே! திருமணமான ஒரே நாளில் குழந்தை பெற்ற பெண்! ஷாக்கிள் புது மாப்பிள்ளை…

நெல்லை, பாளையங்கோட்டை தாலுகா அரியகுளம் லைன் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் வெங்கடேஷ் (25). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், தாழையூத்து அருகே உள்ள ஏரான்குடிபாலத்தைச் சேர்ந்த பால்துரை மகள் பிச்சம்மாளுக்கும் கடந்த ஜூன் 29ம் தேதி இருவீட்டுப் பெரியோர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 13ம் தேதி சாந்திநகர் மணிகூண்டு அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன.

பின்னர், சீவலப்பேரி ரோடு மணிகூண்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்து அன்றிரவே மணமக்கள் அரியகுளத்தில் உள்ள வெங்கடேஷ் வீட்டிற்கு வந்தனர்.

இந்நிலையில், மறுநாள் 14ம் தேதி அதிகாலை பிச்சம்மாளுக்கு திடீரென கடுமையான வயிற்று வலியும், ரத்தப்போக்கும் ஏற்பட்டது. வீட்டின் கழிவறையில் அதிக அளவில் ரத்தம் இருந்ததைக் கண்டு வெங்கடேஷின் அக்காள் விசாரித்தபோது, தனக்கு வயிற்று வலி இருப்பதாக பிச்சம்மாள் தெரிவித்தார்.

இதையடுத்து, வெங்கடேஷும் அவரது அக்காளும் சேர்ந்து பிச்சம்மாளை உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.


இதற்கிடையில், வெங்கடேஷ் வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் ஒரு சிசு இறந்த நிலையில் கிடப்பதாக உறவினர்கள் மூலம் அவருக்குத் தகவல் கிடைத்தது.

உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த வெங்கடேஷ், அங்கு இறந்த நிலையில் சிசு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார்.

பிச்சம்மாள் திருமணத்திற்கு முன்பே சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்திருக்கக்கூடும் எனவும், அந்த உண்மையைத் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் மறைத்து ஏமாற்றித் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்ததால் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேன் எனத் தெரிவித்து, உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வெங்கடேஷ் நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரைப் பெற்றுக்கொண்ட நெல்லை தாலுகா போலீசார், நம்பிக்கை மோசடி, கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையின் தொடர்ச்சியாக, இந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் பிச்சம்மாளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நிலையில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related News

Latest News