இனி வீட்டிலிருந்தே PF விவரங்களை அறியலாம்… EPFO அதிரடி அறிவிப்பு!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சேவைகளை எளிதாக்கும் வகையில், EPFO புதிய WhatsApp வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் EPF கணக்கில் உள்ள இருப்புத் தொகை, சமீபத்திய ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்புக் விவரங்களை எளிதாகப் பெறலாம்.

இந்த வசதியை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, EPFO-வின் 74-வது நிறுவன தின விழாவில் அறிமுகப்படுத்தினார்.

அதிகாரப்பூர்வ WhatsApp எண்: +91 8796441800. இந்தச் சேவையைப் பயன்படுத்த முதலில் மேற்கண்ட எண்ணை மொபைலில் சேமிக்க வேண்டும். பின்னர் WhatsApp மூலம் அந்த எண்ணுக்கு ‘Hi’ என்று செய்தி அனுப்பி, விருப்பமான மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்.

தொடர்ந்து காண்பிக்கப்படும் சேவைகளில் ‘PF Balance’ என்பதைத் தேர்ந்தெடுத்து, அடையாளச் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதைச் சரிபார்த்ததும் PF இருப்பை அறியலாம்.

அதேபோல், ‘Last 5 Transactions’ என்பதைத் தேர்வு செய்து சமீபத்திய ஐந்து பரிவர்த்தனைகளையும், ‘Download Passbook’ என்பதைத் தேர்வு செய்து PF பாஸ்புக்கையும் பெறலாம்.

EPFO-வின் அதிகாரப்பூர்வ WhatsApp எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். UAN கடவுச்சொல், வங்கி விவரங்கள், ATM PIN மற்றும் OTP ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது. இந்த வசதி மூலம் அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே PF விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

Related News

Latest News