மொத்த உலகையும் அலறவைத்த ‘இந்தியா’! 1000 கிலோ வெடிபொருளுடன் பாய்ந்த பிரளய் ‘ஏவுகணை’?

இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணை சோதனையை இந்தியா மிக வெற்றிகரமாக நடத்தி முடித்9துள்ளது.

ஒரு காலத்தில் சிறிய ரக துப்பாக்கிகள் முதல் நவீன ஏவுகணைகள் வரை வெளிநாடுகளையே நம்பியிருந்த இந்தியா, இன்று தன்னிறைவு பெற்று சொந்தமாகவே அதிநவீன ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ (DRDO) நடத்திய இந்த சோதனையில், பிரளய் ஏவுகணை சீறிப்பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் துல்லியமாகத் தாக்கி அழித்தது.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உருவெடுத்துள்ள இந்த பிரளய் ஏவுகணை, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ‘குவாசி-பாலிஸ்டிக்’ வகையைச் சேர்ந்ததாகும்.

சுமார் நூற்று ஐம்பது கிலோமீட்டர் முதல் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் தளங்களைத் தகர்க்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, ஐந்நூறு கிலோ முதல் ஆயிரம் கிலோ வரையிலான அதிபயங்கர வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது.

ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் மற்றும் டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை, திட எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் மிகக் குறுகிய நேரத்தில் ஏவக்கூடியதாகவும், நவீன வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மூலம் வெவ்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திப்பூர் சோதனை மையத்தின் அதிநவீன ரேடார்கள் மற்றும் கண்காணிப்புக் கருவிகள் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த சோதனையை, முப்படைகளின் உயரதிகாரிகளும் விஞ்ஞானிகளும் நேரில் பார்வையிட்டனர்.

இந்தச் சோதனை நூறு சதவீதம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ள இந்த பிரளய் ஏவுகணை, இந்திய எல்லைப் பாதுகாப்பிற்கு மாபெரும் கவசமாகவும், அண்டை நாட்டு எதிரிகளுக்கு ஒரு நேரடி எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

Related News

Latest News