மதுராந்தகத்தில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை: 3-வது சுற்றில் அதிரடி!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம்தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மதுராந்தகம் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், த.வெ.க. 2,997 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. தி.மு.க. 6,370 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அ.தி.மு.க. 5,276 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. நாம் தமிழர் கட்சி 154 வாக்குகளையும், சிபிஎம் 70 வாக்குகளையும் பெற்றுள்ளன.

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தேர்தல் கள நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related News

Latest News