‘இனி பேச்சுவார்த்தையே கிடையாது!’ அமெரிக்காவை தோலுரித்த ஈரான் அதிபர்!

அமெரிக்காவுடன் இனி தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் “அர்த்தமற்றது” என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை அமைதிப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அமெரிக்காவின் உண்மையான நோக்கம் பேச்சுவார்த்தை அல்ல, ஈரானின் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை கவிழ்ப்பதுதான் என்று அரசு ஊடகமான ‘ஐஆர்என்ஏ’ (IRNA) மூலம் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில், இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுதத் திட்டம் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர் வான்வழித் தாக்குதலைத் நடத்திப் போரைத் தொடங்கின.

தினமும் படுகொலைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபடும் ஒரு எதிரியுடன் வாக்குறுதிகளை மீறும் அமைப்பிடம் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று அதிபர் பெசெஷ்கியான் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா ஈரான் மீது நேரடித் தாக்குதல்களை நடத்தாமல் பொருளாதார நெருக்கடிகளை மட்டுமே கொடுத்து வரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியும், ராணுவ ரீதியாக ஈரானை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இதனிடையே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹோர்மூஸ் ஜலசந்தி’ கடல்வழியில், ஈரானின் அனுமதியின்றிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சில கப்பல்கள் ஈரானியப் படைகளின் அச்சுறுத்தலால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு முகமை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

Latest News