பாக்ஸ் ஆபிஸில் மாஸ் செய்யும் ‘மீசைய முறுக்கு 2’…. வெற்றி விழாவில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!!

சென்னையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான் உள்ளிட்டோருடன் தயாரிப்பாளர் குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விழாவில் பேசிய சுந்தர்.சி, ஹிப்ஹாப் ஆதியின் உழைப்பையும், படத்தின் வெற்றியையும் பாராட்டினார். மேலும், உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகி இருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஹிப்ஹாப் ஆதி, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தன்னை நம்பி முழு சுதந்திரம் கொடுத்த சுந்தர்.சிக்கு நன்றி கூறிய அவர், வெளிநாடுகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்தார்.

கானா கலைஞர்களின் வளர்ச்சிக்காக ‘Gana Gang’ என்ற பிரத்யேக தளத்தை தொடங்க உள்ளதாகவும் ஆதி அறிவித்தார். கானா இசையை திரைப்படங்களுக்கு கொண்டு வந்த இசையமைப்பாளர் தேவா, ‘மீசைய முறுக்கு 2’ படத்தை பார்த்து தன்னை பாராட்டியதுடன் முத்தம் கொடுத்ததை நினைவுகூர்ந்த ஆதி, “அந்த முத்தம் இந்த படத்துக்கான ஆஸ்கர் விருது போன்றது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கானா இசையை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தியதன் பின்னணி குறித்தும் தேவா விழாவில் விளக்கினார்.

Related News

Latest News