ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ரேஷன் கடைகளில் இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர்.

போலி குடும்ப அட்டைகள் மற்றும் போலியான பெயர்கள் மூலம் பொருட்கள் பெறுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அடிப்படையிலான eKYC சரிபார்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் முதல் குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான eKYC பதிவு நடைபெற்று வருகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் அடிப்படையில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீத eKYC பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பயனாளிகளின் eKYC பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், வரும் 29.08.2026 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று eKYC சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றும் இதுவரை eKYC செய்யாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

Latest News