3 இலவச சிலிண்டர்!! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? முழு விவரம் இதோ

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த சுமையை குறைக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் சிலிண்டர் பெற்ற பின்னர், அதற்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறு, குறு விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்கள் தகுதி பெறுவார்கள்.

இத்திட்டம் 2027-ம் ஆண்டு பொங்கல் முதல் தொடங்கப்படும் என்றும், ஆண்டுக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News