இடி, மின்னலுடன் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஆகஸ்ட் 25) கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 26-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

மேலும், ஆகஸ்ட் 24 முதல் 27 வரை தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

Latest News