சென்னைக்கு மழை.. ஆனால் இந்த மாவட்டங்களில் வெயில்… முழு அப்டேட் இதோ

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதி வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வடக்கு தமிழ்நாடு, தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக நீள்வதால் இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 18-ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழ்நாட்டில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனுடன் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். இதேபோன்ற வானிலை ஜூலை 19 முதல் 21-ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தாலும், மாநிலத்தின் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரைவும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு தமிழ்நாடு கடற்கரை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே ஜூலை 18 முதல் 21 வரை இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News