சென்னை எழும்பூர்–விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பணிமனையில் அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரை–செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
இந்தப் பராமரிப்புப் பணிகள் இன்று, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணி முதல் மாலை 5.40 மணி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30 மற்றும் 1.45 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, மாலை 3.00 மற்றும் 4.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு மாற்றாக சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30 மற்றும் 1.45 மணிக்கு தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து மதியம் 2.30, மாலை 3.15, 4.00 மற்றும் 5.24 மணிக்கு சென்னை கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
எனவே, இந்த நாட்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, ரத்து செய்யப்பட்ட சேவைகள் மற்றும் சிறப்பு ரெயில்களின் நேர அட்டவணையை கருத்தில் கொண்டு பயணிக்குமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
