09.07.2026; காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு…

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருவதால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். நேற்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 குறைந்தது. பின்னர் மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130, சவரனுக்கு ரூ.1,040 குறைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் திருத்தப்பட்டு, கூடுதலாக கிராமுக்கு ரூ.80 மற்றும் சவரனுக்கு ரூ.640 மட்டுமே குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று ஒரே நாளில் மூன்று முறை விலை மாற்றம் ஏற்பட்டது. மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,250க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் சரிந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,220க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனையானது.

ஆனால் இன்று மாலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,06,560க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் தொடர்ச்சியாக ஏற்படும் இந்த மாற்றங்கள் நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Related News

Latest News