தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில், நாளை { 08.07.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை:
கொட்டிவாக்கம், திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். பெசன்ட்நகர்: சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 1வது மற்றும் 2வது குறுக்குத் தெருக்கள், 9வது லேன், ஜீவரத்தினம் நகர் 1வது பிரதான சாலை என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
டெலிபோன் எக்ஸ்சேஞ் மற்றும் வணிக வளாகம் நொளம்பூர்:
மேற்கு முகப்பேர் 5வது பிளாக் முதல் 8வது பிளாக் வரை மற்றும் கவிமணி சாலை. கே.கே. நகர் : 1 முதல் 12 வது செக்டர்கள், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பி.டி. ராஜன் சாலை, அசோக் நகர் 1, 9 மற்றும் 11- வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் 80 அடி சாலை என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம்:
அறந்தாங்கி நகர்ப்புற துணை மின் நிலையத்திற்குட்பட்ட அறந்தாங்கி டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள். அரிமளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரிமளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள். மேலும், ஆலங்குடி மற்றும் ஆவுடையார்கோவில் வட்டாரப்பகுதிகள். மரமடக்கி துணை மின் நிலையம் மற்றும் அலியாநிலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள். வடகட்டுப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட தள்ளம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கரூர் மாவட்டம்:
கணியாளம்பட்டி, ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாளம்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேல்பகுதி, சி.புதூர் மற்றும் வீராலிப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திண்டுக்கல் மாவட்டம்:
ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி மற்றும் பழங்கானூத்து ஆகிய முக்கிய பகுதிகள்.தர்மபுரி மாவட்டம்: அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல் (HPCL) வளாகப் பகுதி, நாகர்கூடல், பரிகம், காவலர் குடியிருப்பு (Police quarters) மற்றும் வெண்ணம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
