குடியரசு தலைவர்- துணை தலைவரை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று சென்னை நகரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் நாளை காலை 10 மணிக்கு பாரத் மண்டபம் வளாகத்தில் நடைபெறுகிறது.

டெல்லி சென்றடைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் முக்கிய அரசியல் மற்றும் அரசியல் அமைப்புத் தலைவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். கட்சி வட்டார தகவல்களின் படி, அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. மேலும், இன்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

இதற்கிடையே, டெல்லியில் திரவுபதி முர்மு அவர்களை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தொடர்ந்து, சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து பேசினார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவரை விஜய் முதன்முறையாக சந்தித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நாளைய நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில வளர்ச்சி மற்றும் நிதி தொடர்பான முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News