பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகிற்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியாகியதையடுத்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரும், நடிகைகள் ரேவதி, ராதிகா, சுகன்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மூத்த தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் சென்றிருந்தனர்.

முன்னதாக, பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த செய்தியில்,

Related News

Latest News