நீங்கள் இரவில் AC -யில் தூங்குபவரா? இந்த 3 அறிகுறிகள் இருந்தால் உடனே உஷாராகுங்க…

கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்று பலரது வீடுகளிலும் இரவு நேரங்களில் AC இல்லாமல் தூங்கவே முடிவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.பகல் முழுவதும் வியர்வையில் நனைந்துவிட்டு, இரவில் குளு குளு ஏசி காற்றில் தூங்குவது நம் உடலுக்குள் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இரவு முழுவதும் ஏசி காற்றில் தூங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் உடலில் தோன்றும் இந்த 3 முக்கிய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

ஏசி மெஷின்கள் அறையில் இருக்கும் வெப்பத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ஈரப்பதத்தையும் (Humidity) முழுமையாக உறிஞ்சிவிடுகின்றன. இதனால், இரவு முழுவதும் வறண்ட காற்றையே நாம் சுவாசிக்க வேண்டியுள்ளது.காலையில் எழுந்தவுடன் தொண்டையில் ஒருவித வறட்சி, வலி அல்லது தொடர் இருமல் இருந்தால், ஏசியின் உலர் காற்று உங்கள் சுவாசப்பாதையைத் தாக்கியுள்ளது.ஆனால், ஏசி அறையில் நீண்ட நேரம் தூங்குவதால் உடலில் ‘டீஹைட்ரேஷன்’ எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வறட்சியடைவதால் தான் இந்த அதிகாலை தலைவலி ஏற்படுகிறது. இது தொடர்ந்தால் சைனஸ் மற்றும் மைக்ரேன் தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.

இயற்கையான காற்றோட்டம் இல்லாமல், ஏசியின் செயற்கைக் குளிர்ச்சியிலேயே தொடர்ந்து இருக்கும்போது, தோலில் உள்ள ஈரப்பதம் மறைந்து சருமம் சுருக்கமடையத் தொடங்கும். அதேபோல், ஏசியின் குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படும்போது, தசைகள் இறுக்கமடைந்து அதிகாலையில் எழுந்திருக்கும்போது கை, கால் மற்றும் மூட்டுகளில் கடுமையான பிடிப்பு அல்லது வலியை ஏற்படுத்தும்.

இந்த அறிகுறிகள் இருந்து விடுபெற இரவு முழுவதும் ஏசியை ஓடவிடாமல், தூங்கச் சென்ற பின் தானாகவே ஆஃப் ஆகும்படி டைமர் செட் செய்வது நல்லது.இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும் . தொடர் உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் உடனே தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

Related News

Latest News