28.07.2026; தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி: விலை கணிசமாக குறைவு…

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று சரிவு பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது.

இதற்கு முன் ஒரு கிராம் ரூ.13,300 மற்றும் ஒரு சவரன் ரூ.1,06,400 என்ற நிலையில் இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,35,000 ஆக உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்கள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் நீடித்து வருகின்றன.

Related News

Latest News