“ரவி மோகன் எனக்கு மாப்பிள்ளை இல்ல..” ஆர்த்தி தாய் வீடியோ வைரல்…

ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆர்த்தியுடன் விவாகரத்து கோரி ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “இனி ரவி உங்களுடையவர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ரவி மோகன் – கெனிஷா உறவு முடிவுக்கு வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த சூழலில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி மோகன், கண்ணீருடன் பல உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளை பகிர்ந்தார். “இத்தனை நாள் பேசாமல் இருந்ததே தவறு. விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன். 23 ஆண்டுகளாக குடும்பத்திற்காக இரவு பகலாக உழைத்தேன். என் குழந்தைகளை பார்க்க கூட அனுமதி இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், பெண்களின் உரிமையை மதிக்கும் நபர் தான் என்றும், தன்னை தனது தாய் அப்படித்தான் வளர்த்தார் என்றும் கூறினார். “என் சம்பாதித்த பணத்தையும் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார்” என்று மறைமுக குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், “ரவி எந்த தவறும் செய்யமாட்டார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் எனக்கு மருமகன் இல்ல, மகன்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த பழைய வீடியோ மீண்டும் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related News

Latest News