எனக்கு பிளாக் மேஜிக் பண்றாங்க.. ரத்த வாந்தி வருது.. கோபத்தில் கதறி அழும் ரவி மோகன்…

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான குடும்பப் பிரச்சினை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து கோரி ரவி மோகன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பின்னணி பாடகி கெனிஷா பெயரும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையிலான பிரச்சினைக்கு கெனிஷா காரணமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இதனிடையே, ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தொடர்பிலும் கெனிஷா முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்பட்டது. ஆர்த்தி குறித்து சமூக வலைதளங்களில் வந்த கருத்துகளுக்கு கெனிஷா பதிலளித்ததும் சர்ச்சையை அதிகரித்தது.

இந்த நிலையில், ஆர்த்தி தரப்பு வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து, எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. பின்னர் கெனிஷா தனது சமூக வலைதள பதிவில் உணர்ச்சிபூர்வமான கருத்துகளை பகிர்ந்து, தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றும், ரவி மோகனுடன் இருந்த தொடர்பை முடித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விரிவாக பேசினார். தன்னைச் சுற்றி தவறான கருத்துகள் பரவுவதாகவும், தனது குழந்தைகளை பார்க்க விடப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தனது குடும்பம், தொழில் வாழ்க்கை, கடந்த அனுபவங்கள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு விளக்கினார். மேலும் எனக்கு பிளாக் மேஜிக் பண்றாங்க, ரத்த வாந்தி வருது, அவரது மனைவி ஆர்த்தி பிளாக் மையில் செய்த்து தான் செய்த்துக்கொண்டார் என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து கோபத்தில் கதறி அழுது பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், விவாகரத்து முடியும் வரை நடிப்பில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையிலான கருத்து மோதலையும் உருவாக்கியுள்ளது.

Related News

Latest News