2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. கட்சி மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டு, சேலம் எடப்பாடியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது. கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியது.
பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டவில்லை என்றாலும், விஜய்க்கு கிடைத்த மக்களின் ஆதரவு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் சவாலான நிலையை எதிர்கொண்டுள்ளன.
இரண்டாம் இடத்திற்கான போட்டியில் கடும் மோதல் நிலவிய நிலையில், இறுதியில் திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளது. விஜய் விரைவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே “4” என்ற எண் விஜய்க்கு சிறப்பானதாக பேசப்படுகிறது. பலர் இதை த்ரிஷா பிறந்தநாளுடன் இணைத்து பேசினாலும், உண்மை வேறு. விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு 1992 டிசம்பர் 4ஆம் தேதி வெளியானது. அதேபோல், இந்த தேர்தல் வெற்றியும் மே 4ஆம் தேதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் “4” என்ற எண்ணை விஜயின் வாழ்க்கையில் முக்கியமாக்கியுள்ளன. தற்போது கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
