ஓமலூர் அருகே பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை வெட்டிப் படுகொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் ஸ்ரீவித்யாவை அவருடைய கணவரே வெட்டி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

கொலை நிகழ்ந்த பள்ளி வளாகத்திற்கு நேரில் சென்றுள்ள ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த கொலை சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News